business

img

வீட்டு கடனுக்கான வங்கிகளின் வட்டி 6.7 சதவிகிதமாக குறைப்பு....

புதுதில்லி:
வீட்டுக்கடன்கள் மீதான வட்டி விகிதங்களை எஸ்பிஐ, ஐசிசிஐ,  எச்டிஎப்சி போன்ற வங்கிகள்  6.7 சதவீதமாக குறைத்துள்ளன.

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) கடந்த வாரம் வீட்டுக்கடன் மீதான வட்டியை குறைத்தது.இதைத் தொடர்ந்து, கோட்டக் மஹிந்திரா வங்கியும் குறைத்தது,  இந்த வார தொடக்கத்தில், எச்.டி.எஃப்.சி வீட்டுக் கடன் விகிதங்களைக் குறைத்து நிலையில், தற்போது ஐசிஐசிஐ வங்கியும் வீட்டுக்கடன் மீதான வட்டியை விகிதத்தை குறைத்துள்ளன.தனியார்துறை வங்கியான  ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.7 சதவீதமாகக் குறைத்துள்ளது. மார்ச் 3 ஆம் தேதி முதல் எச்டிஎஃப்சி வங்கியும் வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்தது. அதன்படி  மார்ச் 4 முதல் அனைத்து சில்லறை வாடிக்கையாளர்களுக்கும் வீட்டுக்கடன் விகிதங்களை ஐந்து அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி,  தனது வீட்டுக் கடன் விகிதத்தை 6.70 சதவீதமாகக் குறைத்தது. தனியார் துறை வங்கியான  கோட்டக் மஹிந்திரா வங்கியும் சமீபத்தில்  வீட்டுக் கடன் விகிதங்களை 6.65 சதவீதமாகக் குறைத்தது.

இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) வங்கிகளின் கடன் விகிதங்களைக் குறைக்கத்வலியுறுத்தியது. முக்கிய கடன் விகிதமான ரெப்போவை பிப்ரவரி 2019 முதல் 250 பிபிஎஸ் குறைத்துள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது பல வங்கிகள் வீட்டுக்கடன் மீதான வட்டி விகிதங்கள் குறைக்கத்  தொடங்கி யுள்ளன.

;